ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, இன்று ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பாக அக்கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.எம் சாதிக் தலைமையில், நிர்வாகிகள் திரண்டு வந்து புகார் மனு கொடுத்தனர்.
அதில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ப.வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பியை ஒருமையில் பேசி, அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி வருகிறார். எனவே எச். ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது வழக்குப் பதிய வேண்டும் என்றும், இஸ்லாமியர்கள் - இந்துக்கள் மத்தியிலும் தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் தனது பேச்சுக்களையும் கருத்துக்களையும் பதிவிட்டு வரும் எச்.ராஜா மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்றும், தொடர்ந்து தமிழ்நாட்டில் நல்லாட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் எச்.ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அக்பர் அலி, கொடுமுடி பழனிச்சாமி, மாநகரச் செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, மண்டல செயலாளர் எலைட் குப்புசாமி, மாவட்ட அமைப்பாளர்கள் பால்ராஜ், ஆனந்தன், வழக்கறிஞர் சுரேஷ், லெனின் கதிரவன், இளையராஜா, அப்சர், தென்னரசு மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதன், 11 ஜனவரி, 2023
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: