ஞாயிறு, 22 ஜனவரி, 2023

மது பாட்டிலை பொறுக்கி, டெபாசிட்டுக்கு பணம் சேகரிக்கிறேன்,’’ என, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் தெரிவித்தார்...

ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய சுயேட்சை வேட்பாளர்... ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டும் தமிழ்நாடு மதுகுடிப்பபோர் விழிப்புணர்வு சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் சுயேட்சை வேட்பாளர் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள  பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை முன்பு அங்கு வந்து செல்லும் மதுபிரியர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பி ஈடுபட்டுள்ளார்... இதை அப்பகுதிக்கு வந்த மதுப்பிரியர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். 1963 ம் ஆண்டு கும்பகோணத்தில் மது குடிப்போருக்கான மாநாட்டை தந்தை பெரியார் கும்பகோணத்தில் நடத்தியதை நினைவு கூறும் வகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உள்ள ஆறுமுகம் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகையை தொகுதி முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு கிடக்கும் காலி பாட்டில்களை சேகரித்து அதனை விற்று கிடைக்கும் பணத்தை கொண்டு டெபாசிடாக செலுத்தி தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக ஆறுமுகம் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் ...அரசுக்கு அதிகமான வருவாயை தருபவர்கள் மதுபிரியர்கள் தான். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது முதல் அரசாங்கத்தையே நிர்வகிப்பதற்கான பல்வேறு செலவினங்களுக்கான வருவாயையும் வழங்குபவர்கள் மது பிரியர்கள் தான். டாஸ்மாக் மதுவை வாங்கி அருந்துவதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் மது பிரியர்களின் நலனுக்காக இந்த அரசு எதையும் செய்து செய்ததில்லை.எங்களைப் போன்ற மது பிரியர்களின் நல்வாழ்வுக்காக போதை மறுவாழ்வு இல்லம் அமைப்பது போன்ற எதையும் அரசு செய்வதில்லை. ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் பாட்டிலுக்கு ரூ. 10 வீதம் அதிகமாக வசூல் செய்கிறார்கள். இதனை எந்த அரசியல்வாதியும் தட்டி கேட்பதும் இல்லை. சட்டமன்றத்தில் குரல் கொடுப்பதும் இல்லை. எனவே நான் இந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனால் மது பிரியர்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன் என்றார். மேலும், ஆறுமுகத்தின் ( 56 ), இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீரங்கம் ஆர் கே நகர் உள்ளிட்டா பல்வேறு தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் இவர் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார் இவருக்கு செல்வி என்ற மனைவியும், நாகஜோதி என்ற மகளும் உள்ளதாக தெரிவிக்கிறார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: