சனி, 11 பிப்ரவரி, 2023

கள்ளக்காதலில் நீயா? நானா? போட்டியில் மாடுபிடி வீரர் கொலை..! பெண் உள்பட நான்கு பேர் கைது..!


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆலம்பாடி ஊராட்சி செட்டி ஒரு செல்லும் வழியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் மாடுபிடி வீரர் கல்லை கட்டி கொலை செய்த சம்பவத்தில் பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.

கடந்த 9ந் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் மிதந்து வருவதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பெயரில், சடலத்தை மீட்டு, அவர் அணிந்திருந்த ஆடையை வைத்து விசாரணை செய்ததில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்காவிற்குட்பட்ட வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம்  என்ற ஊரைச் சேர்ந்த வீரப்பன் நாகலட்சுமி என்ற தம்பதியின் இரண்டாவது மகன் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்ததில் கள்ளக்காதலில் நீயா? நானா? போட்டியின் காரணமாக மாடுபிடி வீரரை கல்லை கட்டி கல்குவாரியில் வீசி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு தெரியவந்தது. 

அதன்படி, அதே ஊரைச் சேர்ந்த சகோதரி முறையான மூக்காயி ( 30 ) என்பவர் அவரது கணவர் பாலசுப்பிரமணி ( 45 ) என்பவர் மது போதைக்கு அடிமையாகி இருந்து வந்த சூழ்நிலையில், மூக்காயி கரூரில் கோழி தொழிலாளி செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பாலசுப்பிரமணி என்பவரிடம் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்,  

இதைத்தொடர்ந்து, அவர்களது குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை நடந்த நிலையில், கணவன் பாலசுப்பிரமணியனுடன் கரூருக்கு குடி பெயர்ந்து உள்ளார்,  கள்ளக்காதலுக்கு உதவுவதற்காக மூக்காயி, மணி என்பவரை பயன்படுத்தியதாக தெரியவந்தது, 

நாளடைவில் சகோதரி முறையான  மூக்காயிக்கும், மணிக்கும் தொடர்பு ஏற்பட்டு, மூக்காயின் கள்ளக்காதலன் பாலசுப்பிரமணியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் பணம் கொடுக்கல் வாங்கலில் பாலசுப்பிரமணி மூக்காயிக்கு பெரிதும் உதவியதாகவும் கணவன் பாலசுப்பிரமணியை விட, மாடுபிடி வீரர் மணியால் மீண்டும் பிரச்சனை அதிகமாகும் என எண்ணி கருங்குளத்தில் இருந்த மணியை கரூரில் வேலை வாங்கி தருவதாக அழைத்து, பாலசுப்பிரமணி அவரின் உறவினர் சுரேஷ், பாலசுப்பிரமணியம் மகன் பரத்ராஜ் மூக்காயி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து  கை கால்களை கட்டி நீ எல்லாம் எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாடா? என கல்லால் கட்டி கல்குவாரியில் வீசி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சகோதரி முறையான கள்ளக்காதலி மூக்காயி, கள்ளக்காதலன் பாலசுப்பிரமணி சுரேஷ். பரத்ராஜ் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்கள்,

கள்ளக்காதல் போட்டியால் மாடுபிடி வீரரை கொடூரமான முறையில் கொலை செய்து கல்லை கட்டி, செட்டிநாடு ஆலைக்கு சொந்தமான கல் குவாரியில் வீசப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: