புதன், 1 பிப்ரவரி, 2023

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களின் செயல்வீரர் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவனை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு அருகே பிளாட்டினம் மஹாலில் நடைபெற்றது - காங்கிரஸ் கமிட்டியின் மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் வரவேற்புரையாற்றினார், இதில் தமிழக வீட்டு வசதித்துறை சு.முத்துச்சாமி தலைமையில், ஈரோடு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திமுக துணைப்பொது செயலாளர் அந்தியூர் ப. செல்வராசு முன்னிலை வகித்தனர், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மதிமுக பொதுசெயலளார் வை.கோ, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முஸ்லீம் லீக் தலைவர் பேரசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் M H ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுசெயலாளர் E.R ஈஸ்வரன், ஆதிதமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான், மக்கள் நீதி மைய தேர்தல் பொறுப்பாளர் அருணாச்சலம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்கள், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் நன்றியுரை ஆற்றினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: