மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா, ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட
31 வது வார்டு ரஹீமா
சங்கு நகர் கிளை சார்பாக கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம், ஈரோடு திருநகர் காலனியில் உள்ள தேர்தல் பணிமனையில் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமது பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது கூறுகையில் ...
ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி என்பதுடன், அதிமுகவின் தலைமை பாஜகதான் என்று வெளிப்பட்டு உள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டுமா? அந்த கட்சி 2 அல்லது 3 ஆக பிளவுபட்டு இருக்க வேண்டுமா? ஒற்றுமையாக இருக்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்க கூடியவர்கள் நாங்கள் என்பதை பாஜக இந்த பிரச்சினை மூலமாக வெளிப்படுத்தி உள்ளது
அதிமுக தனித்து இயங்க முடியாத நிலையில் உள்ள கட்சி, தங்களது கட்சியையே கட்டுப்படுத்த முடியாதவர்களால் மக்கள் சேவை செய்ய முடியுமா? என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்து விட்டனர்.
அகவே, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஒன்று திரண்டு வந்தாலும் சரி, இரட்டை இலை சின்னத்துடன் வந்தாலும் சரி, பாஜக வை கூட்டணிக்கு அழைத்து வந்தாலும் சரி, அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை இழப்பது நிச்சயம் என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் முகமது லரீப், முகமது ரிஸ்வான், சுல்தான், மீரான், அலாவுதீன், அமீர், சாகுல் அமீது, சையது முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல்சமது கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி வைத்தார், மாவட்ட நிர்வாகிகள் மரக்கன்றுகளை நடட்டனர்.
0 coment rios: