ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், சிறுபான்மை மக்களுக்கு நாம் தமிழர் சீமான் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில்,
பொய் சொல்வதில் பயங்கரமானவர்., தான் சீமான் இலங்கை பிரச்சனையில் சீமான் இரட்டை வேடம் குறித்து மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
இலங்கை மக்களுக்குகாக தமிழகத்தில் உள்ள 106 முகாமில் சிறப்பான அடிப்படை வசதிகள் மற்றும் இலங்கை பொருளாதார பாதிப்பின்போது 174 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உணவு பொருட்களை தமிழக முதல்வர் அனுப்பி உள்ளார்.
மத்திய அரசு, சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கிய நிதியை நிறுத்தியுள்ளது, மன்மோகன் சிங் பிரதமர் இருந்தபோது இருந்த சிறுபான்மையினருக்கான அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டது.
தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருந்த சீமான் இன்று திசைமாறி பேசி கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது., இதனால் அவர் மீது மதிப்பு குறைந்துள்ளது.
மலை குலைந்தாலும் நிலை குலையாத கொள்கை கூட்டணி தான் திமுக கூட்டணி ஆனால் அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என பேட்டியளித்தார்.
முன்னதாக, ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்கு பின்னர் வந்த இஸ்லாமியர்களை சந்தித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர் உடன் கொடுமுடி திமுக பிரமுகர் அபூபக்கர், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஜாபர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
0 coment rios: