ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 16 கிலோமீட்டர் தூரம் ஓடியும், தோட்டத்து கிணற்றில் குதித்து கிராமத்துக் குளியலுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் பணியை துவங்கிய நம்ம ஹெல்த் மினிஸ்டர் மா.சுப்பிரமணியன்..!
தனது முகநூல் பக்கத்தில், தான் குளித்த வீடியோக்களை வெளியிட்டு ஈரோடு மக்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி ஊக்கப்படுத்தியுள்ளார்..!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சிறந்த அத்லட்டிக் வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யக்கூடியவர்.
அந்த வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலின் பொறுப்பாளராக திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்,
அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு தினந்தோறும், இடைத்தேர்தலுக்காக வந்திருக்கும் நாம் எடைகூடக் கூடாது என்பதற்காக இன்று அதிகாலை சென்னிமலை பகுதியில் 16 கிலோமீட்டர் தூரம் மோடியும் நடந்தும் பயிற்சி மேற்கொண்டதாகவும், அவர் தங்கி இருக்கும் தோட்டத்து வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ச்சிகரமான கிராமத்து குளியலுடன் தனது பணியை மேற்கொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, ஈரோடு மாவட்ட பொது மக்களுக்கு உடற்பயிற்சியின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், உடற்பயிற்சியை ஊக்குவித்துள்ளார் நம்ம ஸ்டேட் ஹெல்த் மினிஸ்டர் மா சுப்பிரமணியன்.
0 coment rios: