ஈரோடு காளை மாடு சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கௌரவ பொது செயலாளர் குப்புசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளர் மேசப்பன் வரவேற்றுப் பேசினார் ஓய்வு பெற்ற சங்க மாநில தலைவர் செல்லமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் ஈரோடு மண்டலத்தில் உள்ள கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு கடன் சங்க அனைத்து செயலாளர்கள் நியாய விலை கடை பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பணியாளர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வர்கள் இதில் கலந்து கொண்டனர்
எம் எஸ் சி மற்றும் ஏ எல் எப் திட்டத்தில் தேவையற்ற உபகரணங்களை வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் பொதுப்பணி நிலை திறனில் உள்ள குளறுபடிகளை உடனடியாக தீர்க்க வேண்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு சங்கம் பணியாளர்கள் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் சங்கங்கள் தவணைத் தவிர நகைகளை ஏலம் விட்ட வகையில் ஏற்பட்ட இழப்பை சங்க நஷ்ட கணக்கிற்கு எடுத்துச் செல்ல ஆணையிட வேண்டும் கருணை ஓய்வூதியம் அனைத்து ஓய்வுற்ற பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் பதவி உயர்வு பிரச்சினைகளை நீக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் மேசப்பன் கூறும் போது எங்களது கோரிக்கை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக மண்டல இணை பதிவாளர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மேலும் கடந்த 3ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுமார் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் இந்த நிலையில் எங்களது கோரிக்கை வலியுறுத்தி இப்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுக்கு பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 12-ம் தேதி சிறை நிரப்பும் மறியல் போராட்டம் மண்டல அளவில் நடைபெற உள்ளது என்று கூறினார்.
0 coment rios: