ஈரோடு மாநகராட்சி பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, மாவட்ட செயலாளர் குணசேகரன் பேசினர். ஈரோடு மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். வேலை நிறுத்தம் செய்த எட்டு நாட்களில் தேங்கி கிடந்த, 1,000 டன் குப்பையை அகற்றிய தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை மாலை, 4:00 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.
0 coment rios: