ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள மதிமுக அலுவலகத்தில், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் முருகன் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து கலந்தாய்வு செய்தல், வாக்கு சாவடி முகவர்கள் பட்டியல் கொடுத்தல் தொடர்பாக, பூத் கமிட்டி கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில், அவை தலைவர் அர்ஜூனராஜ், கணேசமூர்த்தி எம்.பி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் பேசுகையில், மதிமுக ஆரம்பிக்கப்பட்டதற்கு பிறகு, முதல் முதலாக பெருந்துறையில் நடந்த தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டோம். அப்போது கட்சி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது. திமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதற்கு பிறகும், நாம் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், பம்பரம் சின்னத்தை கைவிட்டதால், நம்முடைய தனிதன்மையை இழந்து விட்டோம். உதயசூரியன் சின்னத்தில் நாம் போட்டியிட்டதால், மதிமுக கட்சியின் எம்பிகளையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ நமது கட்சியினர் எனக் கூற முடியவில்லை, இதுபோன்ற கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர், இந்த தாழ்வு நம்மிடையே உள்ளது, இது மதிமுகவிற்கு பலகினம் ஆகும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவின் சின்னமான பம்பரம் சின்னத்தில் பம்பர சின்னத்தில் தான் உறுதியாக போட்டியிடுவோம், எனவே அதற்கான முயற்சியை தொண்டர்கள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இதற்கு, மதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், திமுகவின் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி எம்.பி பதிலளித்து பேசுகையில்...
மதிமுக நிர்வாகிகள், தேர்தல் களத்தில் பணியாற்றுவது என்பது குறைவாக இருக்கிறது, நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலில், கட்சி பணியாற்றுவதற்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் போதுமான இல்லை என்பதால் பம்பர சின்னத்தில் போட்டியிடுவது குறித்து நாம் எப்படி வலியுறுத்த முடியும்?, திமுகவுடன் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம், கட்சி பணியாற்றதவர்கள் பலர், கூட்டுறவு சங்கத் தேர்தலில், எங்களுக்கு பதவி வாங்கி கொடுங்கள் என வந்து நிற்கின்றனர். இப்படி இருக்கும் போது, மேலிடத்தில் நான் எப்படி பேச முடியும், நாம் சரியான முறையில் கள பணியாற்றினால் மட்டுமே, கட்சியை நாம் காப்பாற்ற முடியும், பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து உரிய முறையில் பேச முடியும். ஆனாலும் பம்பர் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என பதிலளித்தார், இவ்வாறு சர்ச்சை பேச்சில் மாறி, மாறி ஈடுபட்டதால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், அமைப்பு நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: