ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள படவல்கால்வாய் கோம்புத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகி (வயது 60). இந்நிலையில் கடந்த 16ம் தேதி அதிகாலை இவரது வீட்டினுள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கத்தி முனையில் செல்வநாயகி, அவரது இளைய மகள் கார்த்திகா ஆகியோரின் கைகளை துணியால் கட்டி போட்டனர்.
பின்னர், வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்காததால் 3 பேரும் தப்பிச் சென்றது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசில் செல்வநாயகி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,. பவானி லட்சுமி நகர் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 37), தஞ்சாவூர் மாவட்டம் மரகனேரி பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீடு புகுந்து தாய்-மகளிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக் கொண்டனர். மேலும், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சேலம் மாவட்டம், மேட்டூர் வனவாசி வன்னியர் தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 31), தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மணியக்காரன் கொட்டாயை சேர்ந்த சண்முகம் (வயது 48), ஏரநல்லியைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 47) ஆகியோருடன் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றக் காவலுக்காக அனுப்பி வைத்தனர்.
0 coment rios: