ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி, வடுகபட்டி பேரூராட்சி, வினோபா நகர் பகுதியில், தமிழக அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், மொடக்குறிச்சி தொகுதியின் அடையாளமாக திகழும் மஞ்சள் பயிருக்கு என தனியாக மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கடுமையான முயற்சியினால் அரசால் தற்போது மஞ்சள் சிறப்பு மையம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று பூமி பூஜையிட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழாவில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் அம்பிகாபதி விஸ்வநாதன், துணைத் தலைவர் குழந்தைசாமி, வார்டு உறுப்பினர்கள் விஸ்வநாதன், கோபாலகிருஷ்ணன், நவரசம் குழுமம் பொருளாளர் பழனிசாமி, கீழ்பவானி பாசன விவசாய சங்க தலைவர் நல்லசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ராமநாதன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன், விவசாய அணி ஒன்றிய பொதுச் செயலாளர் பரணி, மகளிர் அணி ஒன்றிய தலைவர் சரண்யா, துணை தலைவர் பிரேமதேவி, பொறுப்பாளர் குணச்சித்திரா, குளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், ஓ.டி.கதிர்வேல், ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மரகதமணி, வேளாண் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், விவசாயிகள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: