செவ்வாய், 21 நவம்பர், 2023

பெருந்துறை சிப்காட்டில் புதிய பொது சுத்திகரிப்பு நிலையம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

பெருந்துறை அடுத்த சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்ட விளையாட்டு துறை அமைச்சர் உதவி நிதி ஸ்டாலின் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் இப்பகுதி மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பேச்சு..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.பிக்கள் அந்தியூர் செல்வராஜ் மற்றும் கனேஷமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அறிவித்தனர்.பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இந்த மக்களின் பத்து ஆண்டு கால கோரிக்கை என்றும் முதல்வர் இதற்கு நிரந்தர தீர்வு கொடுத்துள்ளார். தற்போது சுத்திகரிப்பு நிலையம் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க 40 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு 20 கோடி ரூபாயும் இங்குள்ள தொழிற்சாலைகளின் பங்களிப்பு 20 கோடி ரூபாயுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் 8 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து கழிவுகளும் சுத்திகரிப்பு செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி மாசடைந்த நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்ய முடியும் என்றும் குளங்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 11 திறந்த வெளி கிணறு மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நிலத்தடி நீர் மாசு என்பது இருக்காது என தெரிவித்தார்.மேலும் தொழிற்சாலைகள் வழிமுறைகளை இனி கடைபிடிக்க வேண்டும் மற்றும் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிப்காட் வளாகம் முழுவதும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இங்குள்ள காற்று மாசை குறைப்பதற்கு சிப்காட் வளாகம் முழுவதும் அதிக அளவிலான மரங்கள் நடப்படும் தொடர் நடவடிக்கை மூலம் நீர் காற்று மாசு தடுக்கப்படும். பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: