வரும், 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஈரோடு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு, ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெறுவது வழக்கம். அங்கு வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
வாக்கு பெட்டிகள் கொண்டு வரும் வழிகள், பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், கண்காணிப்பு மையம் அமைக்கும் அறை, போலீஸ் பாதுகாப்பு, வாகனம் நிறுத்தும் இடம், தடுப்புகள் அமைத்தல், மின் விளக்கு வசதிகள், கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து அவர் கள் ஆய்வு செய்தனர். கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது செயல்படுத்தப்பட்ட வழிமுறைகள், ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் விவாதித்தனர். இந்த ஆய்வின் போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 coment rios: