பல்வேறு கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 21 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 567 மதிப்புள்ள 67.95 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்ததோடு, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது
பெருந்துறை பகுதியில் உள்ள கடைகளில் 68 கிலோ குட்கா பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில், பெருந்துறை ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் கடந்த ஒரு வாரமாக பெருந்துறை பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
0 coment rios: