திங்கள், 25 டிசம்பர், 2023

ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று கிறிஸ்துமஸ் தினம் உலகெங்கிலும் விமர்சையாக கொண்டாப்படுகிறது. இதையொட்டி, ஈரோட்டில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களிலும் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து, நள்ளிரவு வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. முன்னதாக கிறிஸ்துமஸ் விழா வருகையை அறிவிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார்கள் கட்டியிருந்தனர். தேவாலயங்களிலும் ஸ்டார்கள் கட்டப்பட்டும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.
இதனால், தேவாலயங்கள் தேவாலயங்கள் வண்ண விளக்குகளின் ஒளியால் ஜொலித்தன. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நேற்றிரவு ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. 
பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் மாதாவின் வயிற்றில் இருந்து பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது, பங்குத்தந்தை ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஆகியோர் பிறந்த குழந்தை இயேசு சிலையை பவனியாக எடுத்து வந்து குடிலில் வைத்தனர். 
தொடர்ந்து திருப்பலி நடந்தது. இந்த வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்ததும் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல், ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம், ஈரோடு ரெயில்வே காலனி, கொல்லம்பாளையம், புன்செய் புளியம்பட்டி, அந்தியூர், நகலூர், தவிட்டுப்பாளையம், வெள்ளித்திருப்பூர், அத்தாணி மற்றும் ஆப்பக்கூடல் பகுதிகளில் உள்ள, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: