ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாநில வல்லுநர் குழு உறுப்பினர்கள் சிவ ஸ்ரீ கே.பிச்சை குருக்கள், கே.சந்திரசேகர சிவாச்சாரியார், கே.தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர்.
இவர்கள் சென்னிமலை ஆண்டவரின் மூலவர் திருமேனியை பார்வையிட்டனர்.
அப்போது ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், தலைமை குருக்கள் ராமநாதசிவம் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உடன் இருந்தனர். அதேபோல் கொடுமுடி வட்டம் கந்தசாமிபாளையம் சடையப்பசுவாமி கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் குறித்தும் மாநில வல்லுநர் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது ஈரோடு மண்டல இணை ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான உமாசெல்வி, ஆய்வாளர்கள் தேன்மொழி, மாணிக்கம் மற்றும் திருப்பணி உபயதாரர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: