ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி பெய்து வருவதால், அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (ஜன.2) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 669 கன அடியாக இருந்த நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 3,056 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம், 82.48 அடியாகவும், நீர் இருப்பு, 17.03 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
மேலும், அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 800 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
0 coment rios: