ஈரோடு ஊராட்சி ஒன்றிய பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி வண்ணாங்காட்டுவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் ஆகிய உறுதிமொழிகளை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு மண்வள அட்டையினை அவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரகாஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) வெங்கடேசன், உதவி இயக்குநர் சூர்யா (ஊராட்சிகள்), செயற்பொறியாளர் (வேளாண்-பொறியியல் துறை) விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), திருமதி.சாந்தாமணி (வேளாண்மை), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமரேஷன், பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மோகனப்பிரியா, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஜெய்குமார் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: