ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காலிங்கராயன்பாளையம் பழையூரில் ரூ.1.86 கோடியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி, காலிங்கராயன்பாளையம் பழையூரில் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் இதர நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுமார் 675 மீட்டர் அளவிற்கு கழிவுநீர் வடிகால் வசதி அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரகாஷ், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: