ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நாளை (ஜன.,20) சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு கிராமத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு பெற மனு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கலாம்.
அதன்படி, ஈரோடு வட்டத்தில் வேப்பம்பாளையம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், பெருந்துறை வட்டத்தில் பணிக்கம்பாளையம் கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் விளக்கேத்தி கடையில் உதவி ஆணையர் தலைமையிலும் நடக்க உள்ளது.
கொடுமுடி வட்டத்தில் கணபதிபாளையம் கடையில் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் காசியூர் கடையில் கோபி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நம்பியூர் வட்டத்தில் வேமாண்டம்பாளையம் கடையில் சின்னபுலியூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும் நடக்கிறது.
மேலும், பவானி வட்டத்தில் சூரியம்பாளையம் கடையில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) தலைமையிலும், அந்தியூர் வட்டத்தில் பட்லூர் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் மாக்கினாங்கோம்பை கடையில் ஆப்பக்கூடல் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், தாளவாடி வட்டத்தில் கும்டாபுரம் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 coment rios: