2017 முதல் ஜூலை 31, 2018 வரை செலுத்திய 13 மாத ஜிஎஸ்டி மற்றும் அபராதத் தொகையைத் திரும்ப தருமாறு மத்திய அரசுக்கு தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலுவைத் தொகையைத் திரும்ப தந்தால், இந்தத் துறைக்கு அதிக லாபம் கிடைக்கும்.
50 கோடிக்கும் குறைவான வர்த்தகம் உள்ள MSMEகள் மற்றும் MSME சான்றிதழ்கள் உள்ளவர்களை IT சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய விதி MSME 43B (h) பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. எனவே அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கந்தவேல், விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், துணி விற்பனையாளர்கள், FATIA செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 coment rios: