மறைந்த முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் கோவில்களில் சமபந்தி விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி, ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற்றது. இந்த சமபந்தி விருந்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டனர்.
முன்னதாக, அண்ணா நினைவு நாளையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், அமைச்சர் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம்.சிவக்குமார், துணைத் தலைவர் செல்வகுமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் அன்னக்கொடி, திருக்கோவில் செயல் அலுவலர் சுகுமார், அறங்காவலர் தலைவர் வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: