அதன்படி, இன்று (30ம் தேதி) காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.66 லட்சத்து 45 ஆயிரத்து 797ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.58 லட்சத்து 11 ஆயிரத்து 390ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.21 லட்சத்து 41 ஆயிரத்து 280ம், பவானி தொகுதியில் ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 300ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850ம், கோபி தொகுதியில் ரூ.10 லட்சத்து 65 ஆயிரத்து 650ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.57 லட்சத்து 28 ஆயிரத்து 848ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.2 கோடியே 43 லட்சத்து 43 ஆயிரத்து 785 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.1 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 195 சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.86 லட்சத்து 11 ஆயிரத்து 590 ரூபாய் தொடர்புடைய கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 coment rios: