புதன், 20 மார்ச், 2024

தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 65 வயதிற்கு உட்பட்ட திடகாத்திரமாக மற்றும் ஆரோக்கியமாக உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களும் பணிபுரிய வரலாம்.

எனவே, முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் படை விலகல் சான்று, முன்னாள் படைவீரர், அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் ஈரோடு, 106/3, காந்திஜி ரோட்டிலுள்ள ஜவான்ஸ்பவன் மூன்றாம் தளத்தில் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலைநாட்களில் நேரில் ஆஜராகி விருப்ப விண்ணப்பத்தினை பெற்று தங்களது பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: