சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பேச்சு…
சேலம்: சேலத்தில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், த.மா.கா., தலைவர் வாசன், பாம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமமுக., பொதுச்செயலாளர் தினகரன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், ஐஜேகே கட்சியின் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் பேசிய விபரம் பின்வருமாறு:
அன்புமணி
தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. இந்தியாவின் பிரதமராக மோடி 3வது முறையாக வர வேண்டும். பா.ஜ., கூட்டணியில் மகிழ்வோடு பாமக இணைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆண்டுகளாக இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.
நடிகர் சரத்குமார்
பா.ஜ.,வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி குறித்து குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஊழலற்ற ஆட்சியாக பா.ஜ., ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. மக்கள் மத்தியில் விஷ விதைகளை விதைப்பவர்கள் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். ராகுல் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வருங்காலத்தில் இந்தியா மேலும் வளர்ச்சி அடைய மோடியின் ஆட்சி தேவை.
டிடிவி தினகரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்
10 ஆண்டுகாலமாக நல்லாட்சியை பிரதமர் மோடி தந்து கொண்டிருக்கிறார். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை இதற்கு முன்பு எந்த பிரதமரும் தரவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த நிதி தாராளமாக போதுமானது. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் ஒரே அரசாணையில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன்
இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்கியே தீருவேன் என்று முழு வாழ்வையும் பிரதமர் மோடி அர்ப்பணித்து கொண்டு இருக்கிறார். சமூக நீதியின் இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர்.
அண்ணாமலை
லோக்சபா தேர்தலில் பா.ஜ., 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். வறுமை என்னும் கொடிய நோயை அழிப்பதற்காக ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் பிரதமர் மோடியை 3வது முறையாக ஆட்சியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு பேசினர்.
0 coment rios: