பின்னர் அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதில், திமுக கூட்டணியில் தனது கட்சிக்கு நாமக்கல் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது கட்சியின் வேட்பாளராக ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளர் என முடிவு செய்யப்பட்டது மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கியதும் தங்களது கட்சியும் அவர் பெயரை வேட்பாளராக அறிவித்துள்ளோம்.
திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன இருந்தாலும் தனது கட்சிக்கு திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எங்களது கருத்துக்களை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது எனவே அதே சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.
இந்தியா கூட்டணி உருவானபோது கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்றார்கள் இப்பொழுது பல மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகளில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது அதேபோன்று தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியில் கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பிரதமரை தேர்வு செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது இந்தியா கூட்டணி வெற்றி பெறும் ஏற்கனவே திமுக தலைவர் கூறியபடி இத்தேர்தல் யார் பதவிக்கு வரக்கூடாது என்பதை நிர்ணயிப்பதாகும் எந்த அரசியல் கட்சியும் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவது நடைமுறைதான் ஆனால் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் மத்திய ஏஜென்சிகளை கொண்டு மிரட்டி ஏராளமான நிதி பெற்றுள்ளது திமுக அவ்வாறு செய்யவில்லை எந்த சலுகையும் நன்கொடையாளருக்கு வழங்கவில்லை திமுகவில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர் ஜாஃபர் சாதிக் என்பவர் ஒரு தனி நபர் அவரது தவறுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சாவை ஒழிப்பது மத்திய அரசின் பங்கும் முக்கியம் ஏனென்றால் துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன வெளிநாட்டில் இருந்து போதை பொருட்கள் துறைமுகம் வழியே வருகின்றன எனவே மத்திய அரசு போதைப் பொருள்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார் கட்சியின் நிர்வாகிகள் முன்னாள் எம்பி சின்ராஜ் சூரியமூர்த்தி ஈஸ்வரமூர்த்தி கோவிந்தராஜ் ஜெகநாதன் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 coment rios: