பின்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவகத்தை மலிவு விலையில் சேவையாற்றி வருகிறார். ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்தது போல தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதியில் வரலாறு படைக்கும் வகையில் அதிமுக வெற்றி வாய்ப்பு உள்ளது.
மக்களும் அதிமுக ஆதரவாக வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். அதிமுக களப்பணி எந்த இயக்கத்தாலும் செய்ய முடியாத வகையில் இருக்கும். அதற்கு அதிமுக கூட்டணி நிர்வாகிகள் உறுதியாக இருப்பார்கள். அதிமுக பொறுத்தவரை கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்டது ஒன்று எனத் தெரிவித்தார்.
0 coment rios: