ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.என்.பாளையம் 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா, அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர் உதயகுமார் ஆகியோர் பூமணியை மீட்டு கோபி அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.
ஆசாரிமேடு பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது பூமணிக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பவித்ரா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில், 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், முதலுதவி அளித்து கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கு தாய், சேய் 2 பேரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா மற்றும் அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர் உதயகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
0 coment rios: