அதன்படி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு வாக்குகள் கேட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். ஈரோடு அவல்பூந்துறை சாலையில் உள்ள கஸ்பாபேட்டையில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார் . முன்னதாக திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து கவுந்தப்பாடி ஆவரங்காட்டூர் பிரிவில் மாலை 4 மணிக்கு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்கம், கருப்பணன் ஆகியோர் செய்துள்ளனர்.
0 coment rios: