தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்!!
பாஜக மாநில செயலாளர் மலர்கொடி பேட்டி!!!
பாஜக மாநில செயலாளர் மலர்கொடி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதன் முரண்பாடுகளை விளக்கி தான் பிரதமர் மோடி தன்னுடைய தேர்தல் பரப்புரையில் விளக்கிப் பேசினார். அவரது பேச்சில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி ஜாதி வெறி கணக்கெடுப்புடன் சொத்து வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் இருந்து 6% ஐ எடுத்து சிறுபான்மையினருக்கு வழங்குவதாக காங்கிரஸ் அரசு சட்டம் நிறைவேற்றியது.
பின்னர் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி இந்த சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என கூறி அதனை நிறுத்தி வைத்தது.
ஜாதி வாரியாக கணக்கெடுப்பு மட்டும் என்று சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டையும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். தனியார் நிறுவனங்களிலும் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்த போவதாகவும் அதனை செயல்படுத்த தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு அபராதம் விதிக்கும் என்று கூறுவது பெருபான்மையினருக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது. பிற்காலத்தில் தனியார் நிறுவனங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும் அபாயம் உள்ளது. இஸ்லாமியர்களுக்கும் இந்த நாட்டில் எல்லா உரிமைகளும் உண்டு ஆனால் தேசத்தை பிரித்தாளும் சூழ்ச்சியாகத் தான் ராகுலின் இந்த பேச்சு உள்ளது. ராகுலின் இந்த பேச்சை பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.
பாஜகவின் கூட்டணி கட்சி யான தமாகாவுக்கு பாஜக நிர்வாகிகள் அனைவரும் போதுமான ஒத்துழைப்பு கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டதால் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் வெற்றி பெறுவார் என்றார்.
0 coment rios: