நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று (ஏப்.,6) சனிக்கிழமை காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.75 லட்சத்து 11 ஆயிரத்து 607ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.84 லட்சத்து 19 ஆயிரத்து 890ம்,
மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.27 லட்சத்து 56 ஆயிரத்து 150ம், பவானி தொகுதியில் ரூ.20 லட்சத்து 94 ஆயிரத்து 300ம், அந்தியூர் தொகுதியில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 750ம் பறிமுதல் செய்ய்துள்ளனர்.
இதேபோல், கோபி தொகுதியில் ரூ.28 லட்சத்து 89 ஆயிரத்து 230ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.75 லட்சத்து 64 ஆயிரத்து 886ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 207 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.3 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 483 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து 327 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், ரொக்கப் பணம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 615 ரூபாயை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள ரூ.1 கோடியே 9 லட்சத்து 18 ஆயிரத்து 868 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
0 coment rios: