வெள்ளி, 19 ஏப்ரல், 2024

ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினார்.
இதனிடையே, ஈரோடு தொகுதி முழுவதும் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 மணி நிலவரப்படி 13.37 சதவீதம் வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 25.37 சதவீத வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து, மதியம் 1 நிலவரப்படி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 42.23 சதவீதம் வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி வரை 64.50 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 7 மணி நிலவரப்படி 71.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: