சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
குடும்பத்தினருடன் தேர்தல் திருவிழாவில் ஜனநாயக கடமையாற்றிய மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தமிழக மற்றும் புதுவையில் இன்று தொடங்கியது.
காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்ற இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று காலை முதலே வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் பெரிய புதூரில் அமைக்கப்பட்டுள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்கச்சாவடி மையத்தில், சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளரரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மற்றும் அவரது மனைவி திருமதி கல்பனா அருள் ஆகியோர் வந்திருந்தனர்.
குடும்பத்துடன் தேர்தல் திருவிழாவில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
0 coment rios: