நேற்று ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமரா பழுது ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1 மணி நேரத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதான சிசிடிவி கேமராவை மாற்றி சரி செய்தனர்.
இந்நிலையில், 2வது நாளாக இன்று காலை ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் சிசிடிவி கேமரா திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால், சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி பழுது ஏற்பட்டது.
இதனையடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் சிசிடிவி காட்சியின் தொலைக்காட்சி பழுதை சில நிமிடங்களில் சரி செய்தனர். அதிக வெப்பம் மற்றும் உயர் மின் அழுத்தம் காரணமாக சிசிடிவி கேமிரா ஒயர்கள் கருகியதால் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கேமரா பழுதான நிலையில், 2வது நாளாக இன்று சிசிடிவி காட்சியின் தொலைக்காட்சி பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: