சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள, அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ம் நாள் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களது பிறந்த நாள் அறச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (17ம் தேதி) புதன்கிழமை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அறச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் இளஞ்செழியன், அறச்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்புச்செல்வி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கலைமாமணி ஆகியோர் கலந்து கொண்டன
0 coment rios: