சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வீதி வீதியாக நடந்தே சென்று பறை இசைத்தவாறு பாமக வேட்பாளருக்கு ஓட்டு வேட்டையாடிய பாமக சட்டமன்ற உறுப்பினர்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்றே கூறலாம்.
வழக்கமாக வேட்பாளர்கள் வேட்ப மனு தாக்கல் செய்த பிறகு திறந்தவெளி வாகனத்தில் சென்றும் நடந்து சென்றும் கட்சி தலைவர்களுடன் சென்றும் பொது மக்களிடம் வாக்குகள் சேகரிப்பது வழக்கமான ஒன்று.
ஆனால் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொது மக்களை கவரும் விதமாக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரிப்பது வழக்கம்.
அந்த வகையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் பாமகவை சேர்ந்த அண்ணாதுரைக்கு ஆதரவாக சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்ன அழகாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறை இசைத்தவாறு வீதி வீதியாக நடந்தே சென்று வீடுகள் தோறும் பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பறை இசைத்தவாறு வாக்கு வேட்டையில் ஈடுபட்ட பாமக சட்டமன்ற சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல் அந்த பகுதி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
பாமக சட்டமன்ற உறுப்பினரின் இந்த வாக்குவேட்டையின் போது கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
0 coment rios: