ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாவட்டச் செயலாளர் முஹம்மது ஆரிப் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாபர் சாதிக்,எஸ்டியூ மாவட்ட அமைப்பாளர் ரியாசுதீன் உள்ளிட்டோர் முன்னிலையிலும்,ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன் சேட் தலைமையிலும், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி சென்னி மலையில் கிளை தலைவர் நூரே ஆலம் தலைமையிலும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தலைவர் கவுஸ் மைதீன் தலைமையில் செயலாளர் சான் பாஷா, செய்யது ஷாநவாஸ் உள்ளிட்டோர் முன்னிலையிலும் , கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜலில் தலைமையிலும், பவானி சட்டமன்ற தொகுதியில் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது பாசித், முஸ்லிம் யூத் லீக் மாவட்ட செயலாளர் சேக் உமர் முன்னிலையிலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஈரோடு மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கே.இ. பிரகாஷ் மற்றும் சுப்புராயன் ஆகியோரை ஆதரித்து ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, பவானி, காங்கயம், கோபிசெட்டிபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளைகள் சார்பில் அதன் பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
0 coment rios: