இந்நிலையில், கடந்த 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டதற்காக முதல்வருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ், வேட்பாளர் பிரகாஷ், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, தொகுதியின் கள நிலவரம் குறித்து ஸ்டாலின் வேட்பாளர் பிரகாசிடம் கேட்டறிந்தார். பின்னர், அவர் வேட்பாளர் பிரகாசுக்கு வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.
0 coment rios: