ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

பள்ளிபாளையத்தில் ஜோதிட ஆய்வாளர்கள் கருத்தரங்கம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ராஜ வீதியில் அமைந்துள்ள குரு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் மற்றும் குரு ராமகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் 114 வது ஜோதிட கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு குரு ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கத் தலைவர் விஜயபூபதி ராஜன் தலைமை வகித்தார்.
செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி பூபதிராஜன் வரவேற்புரையாற்றினார்.

மாதந்தோறும் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் வாஸ்து, குரு கோச்சார பலன்கள், நாடி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பங்கேற்ற ஜோதிட வல்லுநர்கள் அவர்கள் சார்ந்த பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய ஜோதிட பரிகாரங்கள் குறித்தும், ஜோதிட திறன்களை வளர்த்துக் கொள்ளும் கலைகள் குறித்தும்  கருத்துரை வழங்கினர். 
நாடி ஜோதிடம் குறித்து பேராசிரியர் விஜயன், ஜோதிட பரிகாரங்கள் குறித்து மயிலாடுதுறை ரத்னகுமார், திதி யோக கரணம் குறித்து ஆராய்ச்சியாளர் நாமக்கல்  மலர்கொடி, பிரசன்ன ஜோதிடர் சேலம் ரோஸ்லின் ராணி, சிவகாசி சுந்தரபாண்டி, சேலம் ஸ்ரீராம், செந்தூரன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் பிரகாஷ், குமாரபாளையம் விஜய், பரமத்தி பத்மபிரியா, சேலம் ஆனந்தி, பள்ளிபாளையம் முருகேசன், ஈரோடு குணா ஆகியோர் ஜோதிட கருத்துரைகளை வழங்கிப் பேசினர். 
பள்ளிபாளையம் 
நற்பவி ஜோதிடாலயா ஜோதிடர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: