சனி, 25 மே, 2024

ஈரோட்டில் ஐ.டி., ஊழியர் வீட்டில் நகைகள், செல்போன் திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

ஈரோட்டில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 38½ பவுன் நகை திருடிய 2 சிறுவர்கள் உள் பட 3 பேரை போலீசார் கைது செய்தனர் - அவர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்பு

ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இவர் கோவையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழிய ராக பணியாற்றி வருகிறார். கடந்த 19-ந்தேதி மகேஸ்வரன் தனது குடும்பத்து டன் உறவினரின் திருமணத்துக்கு சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பினர். அப்போது அவருடைய குடும்பத்தினர் அணிந்து இருந்த 38½ பவுன் நகை களை கழற்றி ஒரு பையில் போட்டு அதை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு தூங்க சென்றனர்.

புழுக்கம் அதிகமாக இருந்ததால் மகேஸ்வரனின் தாயும், தந்தையும் வீட்டுக்கு முன்பு இருந்த வளாகத்தில் தூங்கினர். இதனால் சுற்றுச்சுவரின் கதவு மட்டும் பூட்டு போடப்பட்டு இருந்தது. வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மறுநாள் அதி காலையில் மகேஸ்வரன் எழுந்து படுக்கை அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 38½ பவுன் நகைகளையும், வீட் டில் இருந்த செல்போனையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு
செய்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை மற்றும் செல்போனை திருடிச்சென்ற மர்மநபர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்பிரபு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இவர்கள், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வந்தனர். இந்தநிலையில் ஐ.டி. ஊழியர் வீட்டில் நகையை திருடியதாக, ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகரை சேர்ந்த மகேந்திரன் (வயது 19) மற்றும் 18, 16 வயதுடைய 2 சிறுவர்கள் என 3 பேரை நேற்று போலீ சார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 38% பவுன் நகை மற்றும் செல்போன் மீட்கப்பட்டது.

இருந்தபோதிலும், கொள்ளை நடந்த வீட்டின் அருகே ஒரு வீட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் முறையாக பதிவாகாததால், காவல்துறையினருக்கு குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது, 

ஈரோடு மாநகர டிஎஸ்பி ஜெய் சிங், கூறுகையில் ... பல லட்சங்களையும் பல கோடி ரூபாய் பணத்தையும் முதலீடு செய்து வீடு கட்டும் ஒவ்வொருவரும், தங்களது வீடுகளை பாதுகாத்துக் கொள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: