சனி, 4 மே, 2024

தொழிற் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய வருடாந்திர நிதி உதவிகளை 20: ஆண்டுகளாக அளிக்காமல் பல லட்சம் ஊழல் செய்த நிர்வாக அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு வழங்கிட தமிழக அரசு தலைமை தொழிலாளர் ஆணையம் எடுக்க வேண்டும்.. தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணி கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டம் தலேமா நிறுவனத்தில் பல கோடி  ஊழல் : சட்டத்திற்கு புறம்பான லே-ஆப் - 
500 தொழிலாளர்கள் பாதிப்பு


தலேமா மின்னனு ( இந்தியா) பிரவேட் லிமிடேட் நிறுவன தொழிலாளர்கள் பாதுகாப்பு  தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், LLF/ JAC அலுவலகத்தில்  நடைபெற்றது.


தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளரும், கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சரசுராம் ரவி தலைமையில் ஆலோசனைக் நடைபெற்றது..

தலேமே மின்னனு தொழிலாளர் நல சங்கத்தின் பொதுசெயலாளர் சி. தங்கம் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக தலேமா கம்பெனி நிர்வாக சீர்க்கேட்டை வன்மையாக கன்டிபது, தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரான லே ஆப்  ( Lay Off )  நடை முறையை கண்டிப்பது, சேலம் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் அவர்களின் பாரபட்சமான Lay Off பரிந்துரையை வன்மையாக கண்டிப்பது, தலேமா நிர்வாகத்தின் முதற் கட்ட  சட்டபூர்வமட்ட Lay Off  முறையை ரத்து செய்து தொழிலாளர்களின் ஊதிய பிடிப்பை திரும்ப கொடுக்க வேண்டும், இதற்கிடையில் தொழிற் சங்க நிர்வாகிகளை கலந்து பேசாமல்  இரண்டாம் கட்ட சட்டபூர்வமற்ற Lay Off அறிவிப்பை ரத்து  செய்ய வேண்டும், போலி ஆவணங்களை கொடுத்து Lay Off அறிவிப்பு செய்த நிர்வாகத்தை கண்டிப்பது, தொழிற் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய வருடாந்திர நிதி உதவிகளை 20: ஆண்டுகளாக அளிக்காமல் பல லட்சம் ஊழல் செய்த நிர்வாக அதிகாரிகள் மீது  விஜிலென்ஸ்  விசாரணைக்கு உத்தரவு வழங்கிட தமிழக அரசு  தலைமை தொழிலாளர்  ஆணையத்தை வலியுறுத்துவது, தலேமா நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகள்  பொது மக்கள்_சமூக  நல உதவி திட்ட நிதி Corporate Social Responsible Funds ( CSR Funds )  பல கோடி மோசடி குறித்து  விஜிலென்ஸ்  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தொழிலாளர் மருத்துவ காப்பீடு ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும், PF, Gratuity, ESI மற்றும்  தொழிலாளர் சீருடை , சீருடை தூய்மை படி,  காலணி, குடை, மழை கோட்டு நிதி பல லட்சம் ஊழல் குறித்து விசாரணை அறிக்கை அளிக்க தொழிலாளர் ஆணையர் - சென்னை அவர்களை வலியுறுத்துகின்றோம் என்ற பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள்,ஜெகன், தலைவர், பா சுந்தர் பொருளாளர், கா கனகராஜ் துணைத்தலைவர், ரா ராஜா
துணைச்செயலாளர், ராஜசேகர், சசிகுமார், தினேஷ்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: