அப்போது திடீரென லாரி டிரைவர் பிரேக் பிடித்து லாரியை நிறுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காமல் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதின. இவ்வாறாக 3 கார்கள் அடுத்தடுத்து மோதின. கார்களில் இருந்த ஏர்பேக் திறந்ததால் காரில் பயணித்தவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். விபத்துக்குள்ளான கார்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதனால் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
0 coment rios: