சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மரண படுக்கையில் தவிக்கும் 400 ஏழை குடும்பங்கள்.... நடவடிக்கை எடுத்து மறுவாழ்வு கொடுக்குமா மாவட்ட நிர்வாகம்... தமிழ்நாடு கூட்டு நடவடிக்கைக்குள் தமிழக அரசுக்கு கோரிக்கை.
சேலம் மாவட்டம்- காடையாம்பட்டி வட்டம்- வேப்பிலை பஞ்சாயத்து- மங்கனிக்காடு மற்றும் தட்ராவூர் கிராமத்தில் தான் கடந்த பல ஆண்டுகளாக மரண பயத்தில் வாழ்ந்து வரும் ஊர் கிராம மக்கள். இந்த குக்கிராமத்தை சுற்றி அடர்ந்த குன்றுகள் நிறைந்தது. கடந்த நூறு ஆண்டுகளாக வன பகுதியாக பாவிக்கபட்டு தமிழக அரசின் வன பாதுகாப்பு திட்டத்தில் பல லட்சம் மரங்கள் நடபட்டு தற்சமயம் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.
இந்த மலை வன பகுதியின் அடிவாரத்தில் அமையபட்ட தாட்ராவூர் சிறு கிராமம். தற்சமயம் 200 ஏழை , குறு விவசாயிகள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்க பெறாமல் வாழ்ந்து வருகின்றனர். தூய்மையான குடிநீர் இல்லை. அடிப்படை சுகாதார வசதிகள் நிறைவேற்றாத வேப்பிலை பஞ்சாய்த்து.
( பணியாள் இல்லாத பூட்டி நிலையில் சுகாதார கட்டிடம் பெயரளவில்.)
இந்த தாட்ராவூர் கிராம மக்கள் இரவில் நிம்மதியாக உறங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. சிறு விவசாய நிலங்கள் பாழடைந்த நிலையில். ஆடு மாடுகள் குடிப்பதற்கு கூட நீர் இல்லை அனைத்தும் மாசு படிந்துள்ளது.
தினம் பொது மக்கள் உண்டும் உணவில் கல்லும், மண்ணும் மாசு கலந்தவையாக. பல உயிர்கள் காரணம் தெரியாமல் மருத்துவ குளருபடியால் மாய்ந்து போனது. இதே நிலை தான் வன குன்றுகளுக்கு மேற் பரப்பில் அமைய பெற்ற மாங்கனிக்காடு குற் கிராமம். இந்த கிராம அப்பாவி மக்களுக்கும் மேற் சொன்ன அனைத்து துயரங்களும், பாதுகாப்பற்ற உறைவிடங்கள். இந்த இரு கிராம வன பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் பஞ்சாயத்து நிதிகள் பயன்படுத்தபடாமல் வரட்ச்சியாகவே உள்ளது. இந்த 400 ஊர் பொது மக்களின் மரண படுக்கையில் தூங்க சென்று மரண பயத்தில் தினம் விடியல் நடக்கிறது. ( விடிய விடிய இரவு நேரத்தில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் )
இந்த இரு பகுதிகளுக்கும் மத்தியில் 1000 அடி உயர மேற்பரப்பில் அமைய பெற்ற கற்பாறை உடைக்கும் அரவை பணிகள். போலி பட்டி ஆவணம் பெற்று
ராஜா மற்றும் செல்வம் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளில் உரிய அரசு அனுமதி பெறாமல் நடத்தி வருகின்ற கள்பாறை குவாரிகள்..
வன துறை வழங்கபடாத போலி NOC ஆவணம், மாசு கட்டுபாடு, புவியுயல் துறை அதிகாரிகள் வழங்கியதாக கூறபடும் போலி ஆவணம் ( துறை சார்ந்த சீல் மட டும் உள்ளது அதிகாரி கையெழத்து இல்லாமல் ) வெட்டி எடுக்கபடும் வனம் சார்ந்த அரசு புறம்போக்கு நிலம் பல ஆயிரம் ஏக்கர் யாரால் என்பது பட்டா நிலமாக மாறியது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
சர்வே பட்டா எண் 410/1+ 410/3 மட்டும் தனி நபருக்கு கைமாறியது எப்படி ? எப்படி சாத்தியம்.?
அந்த நில குன்றுகளை சுற்றி அமைந்துள்ள அரசு கரடு புறம்போக்கு நிலங்கள் பல லட்சம் ஏக்கர் தற்சமயம் தனியார் குவாரி கட்டுப்பாட்டில் வந்தது குறித்து சேலம் மாவட்ட வருவாய் நிர்வாகம் பதில் கூற மறுக்கின்றது. இந்த ஊர் பொது மக்கள் 400 குடும்பங்களின் கோரிக்கை மனுக்கள் எல்லாம் வருவாய் நிர்வாகம், வன துறை நிர்வாகம், மாசு கட்டுபாடெ திர்வாகம் , மைன்ஸ், குவாரி கண்காணிப்பு அதிகாரி ஆகியோரின் கூட்டு சதி, பல லட்சங்கள் லஞ்ச லாவன்யம் இந்த ஊர் மக்களை இழிச்சவாயர் கூட்டமாக பார்க்கின்றது.
கிராம மக்களுன் எந்த கோரிக்கையையும் கவனிக்க மறுக்கும் கிராம நிர்வாக அலுவலர்- வருவாய் ஆய்வாளர்- வட்டாச்சியர். வட்டார வளர்ச்சி அதிகாரி ( BDO ) இந்த பகுதி வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. வேப்பிலை பஞ்சாயத்து நிதிகள் கடந்த 10 ஆண்டுகளில் எங்கே போனது ?
இந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டு நடவடிக்கை குழு தமிழ்நாடு அந்த குக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 3 மணி நேரம் தாட்ராவூர் மற்றும் மாங்கனிக்காடு பகுதி வாழ் மக்களை தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளருமான சரஸ்ராம்ரவி தலைமையில் நேரில் சந்தித்தனர்.
குறைகளை கேட்டறிந்ததோடு கண் முன்னே அப்பாவி மக்களின் அவலங்களை அவர்கள் தினம் மரண படுக்கையில் உறங்காமல் விடியலை சுமந்து கடந்து போகும் வாழ்வை அறிய முடிந்தது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களாக
குவாரி அதிபர்கள் ராஜா, செல்வம் அவர்களது கூட்டாளிகள் இந்த சட்டத்திற்கு புறம்பான குவாரியை மூட வலுயுறுத்தும் கிராம மக்களை குறிப்பாக இளைஞர்களை மிரட்டியும் , அச்சுறுத்தியும், பொய் புகார் கொடுத்து வழக்கு பதிய தீவட்டிபட்டிகாவல் துறையின் உதவியை நாடி வருவதை வன்மையாக கன்டிக்கின்றோம்.
இந்த நிலையை மாற்றி அமைத்திட தமிழக அரசின் விடியல் அரசு முயலுமா ?
காத்திருப்போம்.... வெகு சன மக்களோடு...
0 coment rios: