இதில் சமீப காலமாக கிலோ கணக்கில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 14ம் தேதி ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஜவஹர் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதி, புது மஜித் வீதி பகுதிகளில் ஒரு சில மொத்த விற்பனை கடைகளில் வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாகவும் ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மளிகை கடை வியாபாரிகள் காலை நேரங்களில் இப்பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு வந்து மளிகை கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பொழுது குட்கா பொருட்களும் மொத்த வியாபாரிகளிடம் வாங்கிச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் படி இன்று காலை 6 மணி முதல் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகளிலும் அவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் குடோன்களிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் அதிகரித்து வரும் குட்கா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற சோதனைகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 coment rios: