வியாழன், 2 மே, 2024

*ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து ஆறுதல் கூறிய மனிதநேயம் கொண்ட பாமக சட்டமன்ற உறுப்பினர்*...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்தும், படுக்காயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாமக சட்டமன்ற உறுப்பினர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று முன்தினம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது  தனியார் பேருந்து கவிழ்ந்துவிபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

பேருந்தில் பயணித்து உயிரிழந்த சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது இல்லத்திற்கு சென்ற சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளருமான இரா அருள் அவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி அதோடு மட்டுமல்லாமல் நிதி உதவி வழங்கியும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.

 
தொடர்ந்து  படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து பழக்கூடைகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய சில அரசு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் அரசு மருத்துவமனை முதல்வர் அவர்களை சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் கேட்டுக் கொண்டார். 

இதனை அடுத்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஏற்காட்டிற்கு கூலி வேலைக்கு சென்று உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்றும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்களது குடும்பம் வருமானம் இன்றி தவித்து வருவதாகவும், இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும், இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு எவரும் இல்லாததால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதுடன் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். 
மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதுடன் சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, சேலம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரை, சேலம் மாநகர் மாவட்ட பாமக தலைவர் கதிர் ராச ரத்தினம், பசுமை தாயகம் அமைப்பின் இணை செயலாளர் சத்திரியசேகர், சேலம் நாடாளுமன்ற பாமக பொறுப்பாளர் பொன் குணசேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் சேகர், சமயவேல், சுரேஷ், கோவிந்தன், அருண் மற்றும் சஞ்சய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: