அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் சூரியம்பாளையம் பகுதி அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான கே.சிபழனிச்சாமி ஏற்பாட்டில் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு தங்கத் தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ், ஜெயகுமார், தங்கமுத்து, கோவிந்தராஜ், ஈஸ்வர மூர்த்தி, சித்தோடு வரதராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: