மேலும், அரசு பதிவேடுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கம் போன்றவற்றை ஆவணங்களில் சரியான முறையில் மேற்கொண்டு, அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். கிராம "அ" பதிவேடு, கணினி "அ" பதிவேடு, ஒப்பிடும் பணி ஒருவார காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை தணிக்கை செய்தார். இந்த ஆய்வுகளின் போது கொடுமுடி வட்டாட்சியர் பாலகுமார், மண்டல துணை வட்டாட்சியர் கலைசெல்வி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட இச்சிப்பாளையம், வெங்கம்பூர் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பட்டாமாறுதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், நில அளவை போன்ற பதிவேடுகளை பராமரிக்கவும், உரிய நேரத்தில், சரியான முறையில் பொதுமக்களுக்கு விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
0 coment rios: