வியாழன், 23 மே, 2024

போலி பத்திரம் தயாரித்து அரசு புறம்போக்கு நிலம் அபகரிப்பு செய்த தொழிலதிபர்கள்.... இவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மனு...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே சட்டத்திற்கு புறம்பாக, அரசு புறம்போக்கு நிலங்களை அபகரித்து போலி ஆவணங்களை கொண்டு கற்பாறை  உடைக்கும் பணி மேற்கொண்டு வரும் தனியார் முதலாளிகளை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின்  நடவடிக்கை எடுக்க வலியுத்தி மனு.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் இடத்தில் கோரிக்கை மனு தொடங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளருமான சரசுராம் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம்  மாவட்டம்- ஒமலூர் காடையாம்பட்டி வட்டம் - வேப்பிலை பஞ்சாயத்து  - மாங்கனிக்காடு மற்றும் வே. தாட்ராவூர்  கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக, அரசு புறம்போக்கு நிலங்களை அபகரித்து போலி ஆவணங்களை கொண்டு கற்பாறை  உடைக்கும் பணி மேற்கொண்டு வரும் தனியார் முதலாளிகளை கண்டித்தும்,  அவர்களிடம் பல லட்சங்கள் ஆதாயம் பெற்று கொண்டு ஆதரவளிக்கும் காடையாம்பட்டி வட்டாச்சியர் திருமதி பானு மற்றும் கிராம நிர்வாக அதிகாரி குமார், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் மீது சேலம் மாவட்டம் மேட்டூர்  கோட்டாச்சியர் - அவர்களின் விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 24-05-24. காலை 10 மணி அளவில் 
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வேப்பிலை பஞ்சாயத்து - மாங்கனிக்காடு மற்றும் வே. தாட்ராவூர்  கிராமத்தில் புதியதாக அமைய உள்ள கற்பாறை உடைக்கும்  ஆயத்த பணிகளை நிறுத்த வேண்டும் என்று கூறிய சரசுராம் ரவி, கற்பாறை உடைக்கும் பணியால்  சுற்றுபுற சூழல் மாசு பொது மக்களை வெகுவாக பாதிக்கும் எனவே முறையாக Pollution Certificate பெறபட்டதா என்றும் வன பாதுகாப்பு சட்டபடி வன துறை அலுவலகத்தில் ,NOC தரப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கூறுகையில், குவாரி மைன்ஸ் அதிகாரியின் ஆய்வு சான்றிதழ் பெறபட்டதா என்றும் இதற்கு மேலாக  சுற்று வட்டார  பகுதி வாழ் பொது மக்களிடம் கற்பாறை  உடைக்கும் பணி செய்ய  NOC அதிகாரிகளால்  பெறபட்டதா,  மூன்று வருடம் முன் பெறபட்ட போலி ஆவணங்களை கொண்டு கற்பாறை உடைக்கும் பணி செய்ய பெற்ற ஆவணங்கள், உத்தரவுகள் தற்போதைய மாங்கனிக்காடு ; வே. தாட்ராவூர் - வேப்பிலை பஞ்சாயத்து  சர்வே பட்டா எண் 410/1  மற்றும் 410/3  இடத்திற்கு பொருந்தாது என்பதை  கிராம நிர்வாக அதிகாரி திரு குமார் , வட்டாச்சியர் திருமதி பானு  ஆகியோர் அறிவார்களா, பிற துறை சுற்றுபுற சூழல் - மாசு கட்டுபாட்டு அதிகாரிகள், வன துறை அதிகாரிகள், சுரங்க தொழில் கண்காணிப்பு அதிகாரி , புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் NOC கொடுத்தது எப்படி என்று கேள்வி சர்மாரியாக எழுப்பியதுடன், இந்த கற் குவாரி பணியால் பல நூறு விவசாய, பட்டியலின, பிற்படுத்தபட்ட மக்கள் வெகுவாக பாதிக்கபட்டுள்ளனர் என்றும் வேதனை தெரிவித்தார்.
இறுதியாக, இந்த மக்கள் விரோத ஜனநாயக செயலை   கண்டித்து முதற்கட்டமாக நாளை பெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தெரிவித்த தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவின் நகல்களை மாசுகட்டுபாடு - அதிகாரி- சென்னை, மைன்ஸ் தாசில்தார்
சேலம் மாவட்டம், வனதுறை அதிகாரி
சேலம் சரகம் மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் கோட்டாச்சியர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
இந்த நிகழ்வின்போது,  பாதிக்கப்பட்ட கிராம மக்களின் முக்கிய பிரதிநிதிகள்  மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முக்கிய நிர்வாகிகள் உட்பட 
தங்கராசு, தங்கமணி, செல்லம்மாள், பழனியம்மாள், அந்தோனி, குமரேசன்
என பலரும் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: