சாமி கும்பிட்ட பின்னர் இரவு 7.30 மணி அளவில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். சிவன் நகர் அருகே சென்ற போது, மோட்டர்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டரை உரசுவதுபோல் அருகே வந்த னர். பின்னர் திடீரென மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் பரிமளா கழுத்தில் அணிந்திருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்றான்.
பரிமளா தங்க சங்கிலியை விடாமல் உறுதியாக பிடித்துக்கொண்டு, 'திருடன் திருடன்' என்று அபயக்குரல் எழுப்பினார். இதனால் உஷாரான மர்ம நபர்கள் பாதி சங்கிலியை வெடுக்கென பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் மின்னலாய் மறைந்தார்கள். மர்ம நபர்கள் பறித்து சென்ற நகையின் மதிப்பு ஒன்றரை பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பரிமளா ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்
0 coment rios: